×

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?… ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கம் வாசிப்பில் தகவல்

ராமேஸ்வரம்: தமிழகத்தில் பழைய கட்சி (தி.மு.க.) ஆட்சியை பிடிக்கும் என்று ராமேஸ்வரம் கோயிலில் நடந்த பஞ்சாங்கம் வாசிப்பில் தெரிவிக்கப்பட்டது. சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயில் நடை திறந்து அதிகாலை 5 மணி முதல் ஸ்படிலிங்க பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோயில் மூன்றாம் பிரகாரத்தில் சுவாமி, அம்பாள் உலா நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு நேற்று பகல் 12.45 மணியளவில் கோயிலில் வழக்கம்போல் பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 2021-2022 பிலவ தமிழ் ஆண்டுக்கான சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தை கோயில் குருக்கள் வாசித்தனர். அதில், ‘‘இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும். புதிய வைரஸ் நோய்களால் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்படும். புதிய பல நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவர். அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு சட்டமன்ற தேர்தலில் புகழ் பெற்ற பழைய கட்சியே (தி.மு.க.) ஆட்சி பிடிக்கும்’’ என பிலவ ஆண்டு பஞ்சாங்கத்தின் வருச பலன்களாக குறிப்பிடப்பட்டுள்ளது….

The post தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?… ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கம் வாசிப்பில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Rameswaram Temple Panchangam ,Rameswaram ,Panchangam ,Rameswaram Temple ,DMK ,
× RELATED மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கோடை மழை: உழவு பணியை துவக்க அறிவுறுத்தல்